| மக்களுக்கு நன்மை அளிக்கும் நடவடிக்கைகளின் போது அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. | |||
| தற்போதைய அரசாங்கம் மக்கள் நலத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் சட்ட மூலங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என அதன் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எட்டு பேர் தெரிவாகியுள்ளதாகவும், முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காக தாம் நாடாளுமன்றில் குரல் கொடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் கூடி தீர்மானிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |