Saturday, February 27, 2010

"முஸ்லிம் ஒருவரை ஆளுந்தரப்பு சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்ய வேண்டும் - அமைச்சர் பைசல் முஸ்தபா


கண்டி மாவட்ட முஸ்லிம்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமாயின் பொதுத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை ஆளுந்தரப்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்ய வேண்டுமென சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கம்பளை கிறீன் ஹில் மண்டபத்தில் எம்.எம்.நிஸார் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்;
பொதுத் தேர்தலில் கண்டி மாவட்ட முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாக்கப்படக்கூடாது. ஏனெனில் எனது வெற்றி கண்டி வாழ் முஸ்லிம் சமூகத்தின் வெற்றியாகும்.மத்திய மாகாண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முஸ்லிம் பிரதிநிதித்துவமொன்று கிடைக்கவில்லை. இதற்கொரு காரணம் ஆளுந்தரப்பில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டதாகும். இதனால் மாகாண அரசில் முஸ்லிம்கள் அரசியல் அநாதையாகினர். இதுபோன்று மற்றுமொரு நிலையேற்படக்கூடாது.

கண்டி மாவட்ட முஸ்லிம்கள் பொதுத் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.சிறுபான்மை,பெரும்பான்மை என்ற எதுவித பேதமும் ஜனாதிபதியிடம் இல்லை. எனவே, அவரின் கரங்களைப் பலப்படுத்த வேண்டியது எமது கடமையாகும்.நாம் அரசாங்கத்தை கறிவேப்பிலையாகப் பயன்படுத்திக்கொள்ள முற்படக்கூடாது. எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமானால் பொதுத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை ஆளுந்தரப்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்ய வேண்டும்.

மத்திய மாகாண முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றம் கருதி அரசு மத்திய மாகாணத்தில் முஸ்லிம் கல்விப் பிரிவை உருவாக்கித் தந்தது. இதுபோன்ற பிரிவு வேறு எந்த மாகாணத்திலும் இல்லை. எனவே, ஆளுங்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரொருவரை பொதுத் தேர்தலில் தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பு கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கு உண்டு என்றார்.

-muslimguardian-

Tuesday, February 23, 2010

பொதுத்தேர்தல் குறித்து வடமாகாண மஜ்லிஸுல் சூறா அமைப்பு ஆராய்வு

எதிர்வரும் பொதுத்தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து ஆராயும் கூட்டமொன்று புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.வடமாகாண மஜ்லிஸுல் சூறா அமைப்பின் தலைவர் மௌலவி எஸ்.எச்.எம்.ஏ.முபாறக் (றசாதி) தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக வட மாகாணத்திலிருந்து இருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லிம்களது மீள்குடியேற்றம், இழந்த சொத்துக்களுக்கான நஷ்டஈடு, தொழில் வாய்ப்பு, மதவழிபாட்டுத் தலங்கள் புனரமைப்பு போன்ற அம்சங்களை நிறைவேற்றுவதில் முன்னுரிமையளிக்கும் அணியுடன்,தமது அமைப்பு எதிர்வரும் வாரங்களில் பேச்சுக்களை நடத்தவுள்ளது. மேற்படி கலந்துரையாடலின் போது இம்முடிவு எட்டப்பட்டதாக மஜ்லிஸுல் சூறா அமைப்பின் தேசிய அமைப்பாளர் மௌலவி அஜ்மல்.ஏ.காதர் தெரிவித்தார்.

"முஸ்லிம் விரோத சக்திகளின் கூட்டின் மூலம் சமூகத்துக்கு எந்தவித பலனும் கிட்டியதாக வரலாறுகள் இல்லை. எமது அமைப்பால் முன் வைக்கப்படும் கோரிக்கைகளுக்குக் கிடைக்கும் பதிலின் மூலம்,நாம் சார்ந்து நிற்கும் சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும்" என்றும் தேசிய அமைப்பாளர் மௌலவி அஜ்மல்.ஏ.காதர் மேலும் கூறினார்.
-virakesari.

Monday, February 22, 2010

உணவின் உன்மையான உயா; தரத்தை உறுதிப் படுத்தும் முறையே ஹலால் - ஜம்இய்யத்துல் உலமா

ஹலால் உணவென்பது முஸ்லிம்களுக்கு மாத்திரமான உணவு என்ற கருத்து தவறு என்றும் ஒரு உணவுப் பண்டம் சரியானஇ முறையான சேர்மானங்களுடன் சுத்தமாகவும் உயர் தரத்துடனும் தயாரிக்கப்பட்டது என்பதை வாடிக்கையாளர்களுக்கு உறுதிப் படுத்தும் ஒரு முறையே ஹலால் சான்றிதழ் என்று ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்தது.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று நடைபெற்ற இலங்கையின் முதலாவது ஹலால் மாநாட்டில் ஹலால் சான்றிதழ் பற்றி விளக்கம் அளிக்கும்; போதே ஜம்இய்யத்துல் உலமா பிரமுகர்கள்; இதனை தெரிவித்தனர்.

சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பிரதியமைச்சரான பைஸர் முஸ்தபா
இம் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு; ஹலால் கண்காட்சியையும் திறந்து வைத்தார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பங்களிப்புடன் உடோவியா வெகேஷன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த மாநாடு பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கியிருந்தது.

ஹலால் சுற்றலாத்துறை மற்றும் உணவு தயாரிப்பு பிரிவு மற்றும் ஹலால் நிதி முதலீடு ஆகிய இரு பிரிவுகளில் அமர்வுகள் நடைபெற்றன. இக்கண்காட்சியில் இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமது ஹலால் சான்றிதழ் பெற்ற உணவுப் பொருட்களை காட்சிப் படுத்தியிருந்தன.

சைவ உணவு பிரியர்கள் உருளைக்கிழங்கு வறுவலை சைவ உணவென நம்பி உண்பதாகவும் ஆனால் இதைத் தயாரிக்கும் சில பெரிய நிறுவனங்கள் சில சமயம் இதைத் தயாரிப்பதற்கு விலங்குக் கொழு ப்பைப் பயன்படுத்துவதுண்டு என்றும் சுட்டிக்காட்டிய இவர்கள், இவ்வாறான உணவுப் பண்டங்களுக்கு ஹலால் தரச் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை என்று தெரிவித்தனர்.

இலங்கையில் இதுவரை 145 நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் பெற்றுள்ளன என்றும் பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் இச்சான்றிதழைப் பெற்றிருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பண்டங்கள் இச்சான்றிதழ்களைப் பெற்று விற்பனைக்கு விடப் பட்டுள்ளன. இலங்கையில் ஜம்இய்யதுல் உலமா பண்டங்களை ஆய்வுக்குட்படுத்தி இச்சான்றிதழை வழங்கி வருகிறது.

http://www.muslimguardian.com/

Tuesday, February 16, 2010

காத்தன்குடி கர்பலாவில் பதற்றம்

நேற்று ஆரைப்பற்றை செல்வா நகரைச் சேர்ந்த ஒருவரின் உடல் கர்பலா பகுதியில் கர்பலா ஜும்மா பள்ளியிலிருந்து சிறிது தூரத்தில் வீதிக்கு மறுபுறம் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த HK ஹாஜியாருக்கு சொந்தமான நிலத்தில் புதைக்கப்பட்டதை அடுத்து பிரதேசத்தில் பதற்றம் நிலவுகிறது.
கர்பலா வீதியில் பாலமுனை நோக்கிச் செல்லும் போது இடது புறம் காணப்படும் நிலப்பகுதிகள் 99 வீதம் முஸ்லிம்களுக்கே சொந்தமாக காணப்படுகின்றன. ஏற்கெனவே இப்பகுதியில் இந்துக் கோவில் ஒன்று அமைக்கப்பட்டது பிரச்சினைகளைத் தோற்றுவித்திருந்தது. அநேக காணிகள் எல்லைப்படுத்தப்படாமல் காணப்படுவதாலும், தற்போது உடல் புதைக்கப்பட்ட காணிக்கு அடுத்துள்ள காணி தமிழர் ஒருவருக்கு ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்டு விட்டதால், புதைக்கப்பட்ட காணிக்கு அவர் உரிமை கோருவதாலும் நிலைமை சிக்கலடைந்து இருப்பதாக கர்பலா தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 

நேற்றிரவு சம்மேளனத்தில் இவ்விடயம் தொடர்பான கூட்டம் ஒன்று இடம்பெற்றது. காணி உரிமையாளர் உரிய உறுதியுடன் வந்து உரிமையை உறுதிப்படுத்தி முறைப்பாடு செய்யுமிடத்து புதைக்கப்பட்ட உடலை அகற்றி தமிழர்களுக்குரிய மயானத்தில் அடக்கம் செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்று பொலிஸ் தரப்பு தெரிவித்ததை அடுத்து, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சம்மேளனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே சிகரம் பகுதியில் முஸ்லிம் மக்பரா தொடர்பான பிரச்சினை ஏற்பட்டிருப்பது எமது குழுவிலும் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பான விரிவான கட்டுரை ஒன்று விரைவில் வெளியிடப்படும். இது தொடர்பான கூட்டங்களின் போது, கர்பலா பகுதியில் எங்களுக்கு மயானம் அமைக்க இடம் வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த் தரப்பால் முன்வைக்கப்பட்டிருந்தது. இப்பிரச்சினையின் எதிரொலியாகவே இந்த உடல் புதைக்கப்பட்ட சம்பவம் அமைந்திருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

- http://www.muslimguardian.com/

Monday, February 15, 2010

East London Masjid Appeal

Urgent Masjid Appeal 
Dear Brothers and Sisters,
 
Assallamu Alaikum Warahmatullahi Wabarakathuhu
 
The Sri Lanka Muslim Community of East London has launched a major fund raising project aimed towards establishing a Masjid for the Sri Lankan Muslim community living in East London area.  
With the Blessings and Guidance of Allah (SWT), SLMC of East London is coming up with a plan of purchasing a property to fulfil the urgent needs and requirements of the community living in the region.
 
Please look at the attachments for more information about this Masjid project
 
Making this project a reality is only possible with the blessings of Allah (SWT) and your support as we need to raise GBP 230,000 to acquire the building and an additional GBP 45,000 for the immediate refurbishment works.
 
We sincerely request donors to consider this project favorably so that yet another Masjid could be opened in London and your contribution towards ‘Sadaqathul jaariya’ would be appreciated.
 
Please remember this noble effort in your prayers
May Almighty Allah accept our good deeds
 
Wassalamu’alaikum Warahmathullahi Wabarakathuhu
Executive Committee
Sri Lanka Muslim Community of East London
Registered Charity Number: 1131486

Sunday, February 14, 2010

முஸ்லிம் சமூகத்தை கூறு போடும் மற்றொரு முயற்சி

நேற்று மாலை சாய்ந்தமருது பிரதான வீதியில் ஒரு புதிய அரசியல் கட்சி மக்கள் மத்தியில் பரிணாமம் எடுத்தது. பொது தேர்தல் அண்மிக்கும் இக்காலத்தில் இவ்வாறான சுய லாபங்களுக்காக உருவாக்கப்படும் அரசியல் கட்சிகள் முஸ்லிம் சமூகத்தை மேலும் மேலும் பிளவு பட செய்யும் முயற்சிகளில் ஈடுபடுகின்றன. முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தையும், தேவைகளையும் அதன் அரசியல் அபிலாசைகளையும் வெற்றி கொள்வதற்கு முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமை படுத்தும் முயற்சிகளை விடுத்துவிட்டு அதனை கூறு போட நினைக்கும் எந்தவொரு சமூக விரோத சக்தியையும் முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டிய ஒரு பொறுப்பு இந்த இளைஞர் சமூதாயத்திற்கு உரியதாகும்.

Thursday, February 11, 2010

ஹக்கீம் தலைமையிலான மு.காவை அரசுடன் இணைப்பதில்லையென ஜனாதிபதி எம்மிடம் உறுதி

ரவூப் ஹக்கீம் சார்ந்த முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிடம் தெரிவித்ததாக கட்சியின் தலைவரும் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் எதிர்காலத் திட்டங்கள் சம்பந்தமாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நிப்போன் ஹோட்டலில் நடை பெற்றது. இதன்போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Sunday, February 7, 2010

வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்களின் தொகையை குறைக்க பிரிட்டன் முடிவு


[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 01:59.13 AM GMT +05:30 ]
வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்கள் பிட்டனில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் அத்தகைய விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பதென பிரிட்டன் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அலன் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இரண்டு வாரத்திற்குள் இப்புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவிருக்கின்றன.


மாணவ விசாக்களை வழங்குவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு ஆங்கிலம் பேசும் ஆற்றல் இருக்க வேண்டும் என்பதும் குறுகியகால பிரிட்டிஷ் கற்கை நெறிகளுக்கு வருவோர் அவர்களில் தங்கியிருப்போரையும் தம்முடன் அழைத்து வருவதை தடை செய்தல் போன்றவை உட்பட பல கட்டுப்பாடுகள் அமுல்செய்யப்பட இருக்கின்றன என்று அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்தார்.

உண்மையாக கல்வி கற்க வருவோரை இலக்கு வைத்து இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர், தொழில் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு பிரிட்டன் வருவோருக்காகவே இந்த நடவடிக்கை என்றும் கூறினார்.

தோல்வியில் முடிவடைந்த சிக்காகோ விமானக் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதம மந்திரி கோர்டன் பிரவுணின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமைச்சர் ஜோன்ஸன் மேலும் தெரிவித்தார்.

மேற்படி நத்தார் தின குண்டு வெடிப்பை நடத்தியதாக கூறப்படும் உமர் பாரூக் அப்துல் முதலாப் லண்டனில் கல்வி கற்றவர் என்றும் பிரிட்டனிலிருந்து சென்ற பின்னர் யேமனில் அல்குவைதா இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர் என்றும் பிரதமர் கூறியதன் பின்னர் இந்த மதிப்பீட்டுக்கு உத்தரவிடப்பட்டது.

2008 / 2009ம் ஆண்டு காலத்தில் பிரிட்டன் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் மாணவ விசாக்களை வழங்கியது. தற்போதைய நடவடிக்கையால் வெளிநாட்டு மாணவ விசாக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறையலாம் என்று தெரிவித்த உள்துறை அலுவலக பேச்சாளர், எவ்வாறாயினும் பல்லாயிரக்கணக்கில் வீழ்ச்சி ஏற்படும் என்று வெளியான அறிக்கைகளை நிராகரித்தார்.

ஒரு சில வாரங்களுக்குள் அமுல் செய்யப்படவிருக்கும் இந்த நடவடிக்கை தொடர்பாக சட்டம் ஒன்று இயற்ற வேண்டிய தேவை இல்லை. நேபாளம், வட இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட மாணவ விசாக்கள் அதிக அளவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதால் அந்நாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்படும் மாணவ விசாக்கள் இடைநிறுத்தப்பட்டு ஒரு வாரத்திற்குள் மேற்படி புதிய நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உச்சவரம்பை உயர்த்துதல் பிரிட்டனுக்கு வரவிரும்பும் மாணவர்களுக்கான தகைமையில் 40 புள்ளிகளை பெறவேண்டும் என்ற தேவையை கடந்த வருடம் பிரிட்டன் அறிமுகம் செய்தது.

ஆனால் பயங்கரவாதிகளும் ஏனையோரும் இதன் மூலம் பிரிட்டனுக்குள் நுழைந்து விடுவார்களெனக் கூறி பல விமர்சனங்கள் எழுந்தன.

தற்போது கல்வி கற்கும் நோக்கத்தை தவிர்த்து வேலை செய்யும் முக்கிய நோக்கத்துடன் பிரிட்டன் வருவோரை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்தார்.

தற்போதைய தீர்மானத்தின்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளாவன:

* ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைத் தவிர்ந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதில் தற்போதுள்ள ஆரம்ப மட்ட அறிவிலும் பார்க்க ஜி சி எஸ் ஈ (G C S E) தரத்திற்கு சிறிது குறைந்த மட்ட அறிவையேனும் பெற்றிருக்க வேண்டும்.

* பட்டப்படிப்பு மட்டத்திற்கு குறைந்த கற்கைநெறிகளை பின்பற்றுவோர் தற்போதுள்ள 20 மணிநேர வேலைக்கு பதிலாக இனிமேல் 10 மணி நேர வேலை செய்வதற்கே அனுமதிக்கப்படுவார்கள்.

* 6 மாதங்களுக்கு குறைந்த கற்கைநெறிகளுக்காக வருவோர் அவர்களில் தங்கியிருப்போரை அழைத்து வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் பட்டப்படிப்பு நெறிகளுக்கு குறைந்த நெறிகளை பின்பற்றுவோருடன் வரும் அவர்களில் தங்கியிருப்போர் பிரிட்டனில் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

* இவற்றுக்கு மேலாக, மாணவர்களை அனுமதிக்கும் கல்வி நிறுவனங்கள் அதி உயர் நம்பக தன்மையைக் கொண்ட அனுசரணையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் மட்டுமே அங்கு பட்டப்படிப்பு மட்டத்திற்கு குறைந்த நெறிகளை பின்பற்றுவதற்கான விசாக்கள் வழங்கப்படும்.

-Tamilwin-

Rifqa Bary's Parents

A native Sri Lanka muslim girl Converts to christianity and Flees Murder from Muslim Parents, USA

Sri Lankan Muslims-History

Thursday, February 4, 2010

பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் புரிந்துணர்வுடன் தனித்து போட்டியிட முடிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்துப் போட்டியிடுமெனத் தெரிவித்த அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், அதேசமயம் தமிழ்முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கு பங்கம் ஏற்படாமல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவோம் எனவும் சுட்டிக்காட்டினார்.
தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளையும் உரிமைகளையும் பாதுகாத்து எமது மக்கள் பெரும்பான்மை சமூகத்தோடு சம உரிமையுடன் வாழும் சூழ்நிலையை உறுதிப்படுத்துவதற்காகவே முஸ்லிம் காங்கிரஸுடன் புரிந்துணர்வு அடிப்படையில் ஒன்றுபட்டிருப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து நேற்று திங்கட்கிழமை கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நடத்திய கூட்டுச் செய்தியாளர் மாநாட்டிலேயே ஆர்.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையைப் பலமானதாகக் கட்டியெழுப்பும் ஒரேநோக்கத்துடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒன்றுபட்டிருப்பதாகவும் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களையும் இதனோடு இணைத்துக் கொண்டு எமது ஒற்றுமைப் பலத்தை உறுதிப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்த அவர் செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;வரக்கூடிய பொதுத்தேர்தல் தொடர்பில் நாம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றோம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாம் தனித்தே போட்டியிடுவோம். இதில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது. எனினும் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் இரு சமூகங்களான தமிழ், முஸ்லிம் மக்களின் நலன்கருதி மிகவும் ஒற்றுமையுடன் இத்தேர்தலைச் சந்திக்கவிருக்கின்றோம்.
தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே ஒற்றுமையையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பி அதனைத் தொடர்ந்து பேணுவதற்கானதொரு புரிந்துணர்வை நாம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
பொதுத்தேர்தலின் போது தமிழ், முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்குப் பங்கம் ஏற்படாத
விதத்தில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட நாம் உறுதிபூண்டிருக்கின்றோம். தமிழ், முஸ்லிம் மக்கள் அதனையே எம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றனர். அவர்களின் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காகவே நாம் ஒன்றுபட்டிருக்கின்றோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.ஜனாதிபதித் தேர்தல் முடிந்திருக்கும் ஒரு சூழ்நிலையில், பொதுத்தேர்தலை எதிர்கொள்ளப்போகும் வேளையில் தெற்குச் சிங்கள மக்களுக்கு எவ்வாறானதொரு செய்தியை கொல்லப்போகிறீர்கள்? என்று சிங்கள ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் கூறியதாவது;நாம் எப்போதும் சிங்கள மக்களோடு ஒன்றுபட்டு வாழவே விரும்புகின்றோம். தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்கள் வேறுபட்டு இந்த நாட்டில் வாழக்கூடாது. பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கிருக்கும் உரிமைகள் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் இருக்க வேண்டும்.
நாட்டை பிரிக்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் கேட்கமாட்டோம். இதனை 1960, 70 களில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட நாம் வலியுறுத்தியுள்ளோம். பிளவுபடாத இலங்கைக்குள் சகல சமூகங்களும் சம உரிமையுடன் வாழக்கூடியதாக அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அந்தக்கோரிக்கையாகும்.
அதனையும் மீறி நாட்டை பிரிக்கவேண்டுமென்ற கோஷத்துடன் யாராவது தமிழ் பேசும் மக்களிடம் ஆணை கேட்டுவந்தால் அவர்களை தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டுமென நாம் அன்றே தெரிவித்திருக்கின்றோம்.இந்த நாட்டில் சிங்கள மக்களோடு தமிழ், முஸ்லிம் மக்களும் சம உரிமையுடன் தலை நிமிர்ந்து வாழும் விதத்தில் ஒரு காத்திரமான தீர்வு காணப்படவேண்டும். அவ்வாறான சூழ்நிலையைத்தான் எமது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் சகல சமூகங்களுக்கும் சம உரிமை வழங்கியதால் அந்த நாடுகள் இன்று நல்லமுன்னேற்றம் கண்டுள்ளன. அபிவிருத்தியில் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றன. அவ்வாறானதொரு வழியை நாமும் பின்பற்றினால் அடுத்த 10 வருடங்களில் எமது நாட்டையும் முழுமையாக மாற்றியமைக்க முடியும். இந்தச் செய்தியையே தென்னிலங்கை சிங்கள மக்களுக்குச் சொல்ல விரும்புகின்றேன்ள என்றார்.
- Thinakkural -

111 பேருக்கு நேற்று மெளலவி ஆசிரியர் நியமனம்

அரசாங்கம் நேற்று 111 பேருக்கு மெளலவி ஆசிரியர் நியமனம் வழங்கியது. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் வைத்து அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த்தினால் வழங்கப்பட்டது.

முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 17 வருடங்களின் பின்னர் முதற் கட்டமாக 111 பேருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது.இவ்வைபவத்தில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் உரையாற்றுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நான்கு வருட கால ஆட்சியில் 33 ஆயிரம் பேருக்கு கல்வியமைச்சின் கீழ் ஆசிரியர் நியமனங்கள், கல்வி நிருவாக அதிகாரிகள் போன்ற நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதே போன்று கடந்த ஆறு மாதங்களுக்குள் 1450 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்று வழங்கப்படும் 111 மெளலவி ஆசிரியர் நியமனத்துடன் மேலும் 173 ஆங்கில மொழி மூலமான கணிதம்/ விஞ்ஞான பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படுகிறது.

- Lankamuslims -

யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்ற கனவு நனவாக வேண்டும்

கூரையில்லாத இறையில்லங்கள், பள்ளிவாசல் பளிங்குத் தரையிலே பற்றைக்காடு... இடிந்த கல்லூரிகள்... அத்திவாரம் மட்டுமே மிச்சமிருக்கும் குட்டிச் சுவராக நாம் வாழ்ந்த மாளிகைகள்.

இவைகள் என்ன போர்க்காலத்தின் அடையாளங்களா? குண்டு வீச்சில் அழிந்த பிரதேசங்களா?

நிச்சயமாக இல்லை. மனிதம் மரணித்துப் போனதால் ஒரு சமூகம் வேரோடு பிடுங்கி வீசப்பட்டதால்... இரு மணித்துளியில் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வட மாகாண முஸ்லிம்கள் தமது பூர்வீக மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டதால் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கிய இல்லங்கள் இப்படிச் சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டன.

இவையெல்லாம் நிகழ்ந்து இரு தசாப்தங்களாகி விட்டன. வரலாறு மறக்காத வடுவாக அமைந்து விட்ட அந்தநாளை மறக்க முடியவில்லை. அன்று ஒக்டோபர் 30. பந்துக்களாக வாழ்ந்த நாம் உதைபந்தாடி மகிழ்ந்த ஜின்னா மைதானத்தில் பந்துகளாக உதைத்து விரட்டப்பட்டோம்.

கையிலிருந்த பணத்தையும் தங்க நகைகளையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டபோது இடைவழியில் “ஈழத்தைக் கடப்பதற்கு இருநூறு போதும்” என்று அத்தனையையும் அபகரித்து பணமூடைகளாகவும், தங்க நகை மூடைகளாகவும் அபகரித்துச் சென்றதும் அழிக்க முடியாத மனத்தடங்களாகும்.

எதுவுமறியாத பிஞ்சுக் குழந்தைகள் புலிகளைக் கண்டு கையசைத்தபோது கிஞ்சிற்றும் நெஞ்சிலே ஈரமின்றி அவர்களிடமுள்ள மஞ்சாடி நகைகளையும் மிஞ்சாது பிடுங்கிய கொடூரம் என்றும் மறக்கக் கூடியதல்ல.

இரு தசாப்தங்களாக அகதி முகாம்களில் வாழும் வடமாகாண முஸ்லிம்கள் இப்போது தமது மீள்குடியேற்றம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

அண்மையில் ஜனாதிபதியவர்களும் வட மாகாண முஸ்லிம்களின் இரு தசாப்த கால அகதி வாழ்க்கை பற்றியும் அவர்களது மீள்குடியேற்றம் பற்றியும் எடுத்துக் கூறியுள்ளார். பசில் ராஜபக்ஷ தலைமையில் ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் மூலமும் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அது மட்டுமன்றி சென்ற வாரம் வடமாகாண முஸ்லிம் மகளிர் அணியினர் ஜனாதிபதியைச் சந்தித்த வேளையில் தமிழில் உரையாற்றிய அவரது வார்த்தைகள் மேலும் நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளன.

எனினும் கடந்த காலங்களில், சர்வதேச நாடுகளும், அரச சார்பற்ற உதவி வழங்கும் நிறுவனங்களும், வடமாகாண முஸ்லிம் அகதிகள் விடயத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றன என்பதே கசப்பான உண்மையாகும்.

அண்மையில் இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான இறுதிப் போரின் போது புலிகளால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்ட தமிழ் மக்கள், இன்று அகதிமுகாம்களில் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களின் துயர் துடைப்பதற்காக சர்வதேச நாடுகளும், சமூக நிறுவனங்களும் முன்வந்துள்ளன. நிச்சயம் அவர்கள் மீது கரிசனை செலுத்தியாக வேண்டும். கடந்த காலங்களில் வன்னியிலிருந்து முகாம்களில் வாழும் தமிழ் மக்களுக்காக, இலங்கையின் பல பாகங்களிலுள்ள முஸ்லிம் நிறுவனங்களும், முஸ்லிம் கவுன்சிலும் மனிதாபிமான உதவிகளைப் புரிந்த வேளையில் அவர்களுடன் வடமாகாண முஸ்லிம்களும் இணைந்து உதவிகளை வழங்கி வந்தனர்.
அழிந்துபோன மத்ரஸா


புலிகளால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போதும் தமிழ், முஸ்லிம் உறவில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. வடமாகாண முஸ்லிம், தமிழ் மக்களுக்கிடையிலான உறவு மிகவும் புனிதமானது. ஆழமாய் வேரோடிய அவர்களது நட்பு என்றும் அழிக்க முடியாதது. பிரிக்க முடியாதது. புலிகளது நடவடிக்கையால், அவர்களது உறவில் சிறிது கால இடைவெளி ஏற்பட்டாலும், அவர்களது இதயத்தில் எவ்வித இடைவெளியுமின்றி வாழ்ந்து வருகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நீண்ட காலத்திற்குப் பின் சந்திக்கும் தமிழ், முஸ்லிம் மக்கள், கட்டித் தழுவி கண்ணீர் விடுகின்ற காட்சிகள்,

அவர்களது மாறாத உறவின் சாட்சிகளாகும்.

எனவே, வன்னி முகாம்களில் வாழும் தமிழ் அகதிகளுக்காக சர்வதேச நிறுவனங்களும், நாடுகளும் உதவுவதை வட மாகாண முஸ்லிம்கள் வரவேற்கின்றனர். எனினும் இரு மணிநேர அவகாசத்தினுள், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், இரு தசாப்த காலமாக அகதி முகாம்களில் படும் அவலங்களை, சர்வதேச நாடுகளும் உதவி வழங்கும் நிறுவனங்களும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது. இவர்களின் பார்வையில் வடமாகாண முஸ்லிம்கள் மனித இனமில்லையா? புலிகளின் இனச்சுத்திகரிப்பு இவர்களுக்குப் புரியவில்லையா? மனித உரிமைகள் பற்றிக் கூக்குரலிடும் நிறுவனங்களுக்கு வடமாகாண முஸ்லிம்கள் மீது நடைபெற்ற கொடுமை, இன அழிப்புக்குச் சமமானது என்பது தெரியவில்லையோ?

1948 இல் இன அழிப்பிற்கு எதிரான சாசனம் ஐக்கிய நாடுகள் பேரவையில் உருவாக்கப்பட்டது. இன அழிப்பு நடவடிக்கையின் கூறுகளை ஐ.நா. சாசனம் பின்வருமாறு வரையறை செய்கின்றது.

ஒரு தேசிய இனத்தின் அல்லது குழுமத்தின் உறுப்பினர்களைக் கொல்வது.

ஓர் இனத்துக்கு அல்லது குழுமத்துக்கு வலிந்தும் திட்டமிட்டும் பாரிய உடல், உள ரீதியான இன்னல்களை விளைவிப்பது.

சொந்த வாழ்விடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றுவது.

இனத்தின் மத்தியில் குழந்தைகள் பிறக்காமல் கொடுமைகள் புரிதல்.

பண்பாட்டு வாழ்வியலின் தனித்துவங்களை அடையாளங்களை அழித்தல்.
அழிந்த நிலையில் ஒரு வீடு


இச்சாசனத்தின் அடிப்படையில், சொந்த வாழ்விடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுதலும், பண்பாட்டு வாழ்வியலின் தனித்துவ அடையாளங்களை அழித்தலும் இன அழிப்புக்குச் சமமான குற்றங்களாகும். இவை இரண்டுமே வடமாகாண முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன.

சர்வதேச நாடுகளும், மனித உரிமை நிறுவனங்களும், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பும், இவைபற்றி அறியாதவைகளல்ல.

இதுவரை காலமும் ஐக்கிய நாடுகள் சபையும் வடமாகாண முஸ்லிம்கள் விடயத்தில் கண்மூடித்தனமாகவே நடந்து கொண்டுள்ளது. இந்த வன்னி அகதிகளை மீளக்குடியேற்றும்படி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் ஐ.நா, என்றாவது வடமாகாண முஸ்லிம்களை மீள்குடியேற்ற அனுமதிக்கும்படி புலிகளை வலியுறுத்தியுள்ளதா? ‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ என்ற போர்வையில் முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்களைக் கொன்றும், முஸ்லிம் நாடுகளைச் சிதைத்தும் வருகின்ற ஐரோப்பிய நாடுகள், வடமாகாண முஸ்லிம்கள் மீதும் காழ்ப்புணர்ச்சியுடனும், துவேஷத்துடனும் நடந்து கொள்கின்றன எனச் சிந்திக்க வேண்டியுள்ளது.

எனவே சர்வதேச நாடுகளும், ஐ.நா. சபையும் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களும் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் உண்மையான அக்கறையுடன் பேதமின்றிச் செயல்பட வேண்டும் என்பதே வடமாகாண முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும்.

யாழ்ப்பாணம் முஸ்லிம்களைப் பொறுத்தவரை அண்மையில் நடந்து முடிந்த மாநகர சபைத் தேர்தல், மீள்குடியேற்றம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதெனலாம். யாழ். மாநகர சபையில் வெற்றிபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஐந்து முஸ்லிம்கள் அங்கம் வகிக்கின்றனர்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட நான்கு முஸ்லிம் உறுப்பினர்களான சட்டத்தரணி எம். எம். ரமீஸ், எம். எஸ். முஸ்தபா, எம். அஸ்கர் ரூமி, அஸ்பர் அஜ்மயீன் ஆகியோரும் சுயேச்சையாகப் போட்டியிட்டு ஐ.ம.சு.முன்னணியுடன் இணைந்த சுபியான் மெளலவி ஆகிய ஐவர் மாநகர சபையில் அங்கம் வகிப்பதானது யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கான உட்கட்டமைப்பு புனரமைப்பு நடவடிக்கைகளின் செயற்பாட்டுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. அத்துடன் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சின் இணைப்பாளராக சட்டத்தரணி எம். எம். ரமீஸ் அமைச்சர் றிசாத் பதியுதீனால் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ். மாநகரசபை முதலாவது அமர்வின் போது நடைபெற்ற வரவேற்பு விழாவிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் வந்து குடியேறும்படி வேண்டிக்கொண்டார்.

முதலாவது அமர்வின் போது உரையாற்றிய மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, ‘1990ல் முஸ்லிம்கள் விரட்டப்பட்டது மிகவும் வேதனைக்குரியதாகும். யாழ். முஸ்லிம்கள் மீளக்குடியேற வேண்டுமென, யாழ். மாநகரசபை சார்பிலும் வடமாகாண தமிழ் மக்கள் சார்பிலும் வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.

தமிழ்க் கூட்டமைப்பைச் சார்ந்த யாழ் மாநகர சபை எதிர்க் கட்சிக்குத் தலைமைதாங்கும் சட்டத்தரணி ரெமீடியாஸ், “யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் சமூகம் வெளியேற்றப்பட்டதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

சமூக நம்பிக்கை நிதியத்தில் நான் கடமையாற்றிய போது புத்தளத்தில் அவர்கள் பட்ட இன்னல்களையும் அறிவேன்.

எனவே அவர்கள் மீண்டும் மீள்குடியேற்றப்பட்டு தமிழ் முஸ்லிம் உறவு கட்டியெழுப்பப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றிய கனவுகள் நிறைவேற வேண்டும்.

மீண்டும் தமிழ் - முஸ்லிம் உறவுகள் கட்டியெழுப்பப்பட வேண்டும். சர்வதேச நாடுகளும், அரசசார்பற்ற நிறுவனங்களும் இதய சுத்தியுடன் இம்மக்களுக்கு உதவ வேண்டும்.

-தினகரன் -