Monday, March 29, 2010

சீண்டி பார்த்த நக்கீரன் இதழ் அலுவலகத்தை சீற்றத்துடன் முற்றுகையிட்ட முஸ்லிம்கள்! (கோஷம் பத்திரிக்கை செய்தி)

நித்யானந்தரின் வெளிவந்து இலட்சகனக்கில் விற்றுள்ள புத்தகங்களில் உள்ள கருத்துக்கள் எல்லாம் அவரால் எழுதப்பட்டவை அல்ல. பதிப்பு செக்சனை கவனித்துகொண்ட ஒரு மடம் தயார் செய்தவைதான் அவையெல்லாம். உரை நிகழ்த்தும் போது கூட நித்தியானந்தா சொந்த கருத்துக்களை சொல்வதை விட பகவத் கீதை, பைபிள், குரான் உள்ளிட்ட பலவற்றிலும் கருத்துக்களை எடுத்து கொடுக்க சொல்லி கேட்பார். அவையெல்லாம் நித்தியானந்தா சொல்வதாகவே ஆடியோவிலும் புத்தகங்களிலும் பதிவாகும்.

வெளியீட்டு பிரிவினர் இது பற்றி யோசித்தபோது "என்ன யோசிக்கிறீங்க? மக்களுக்கு சேவை செய்வதற்காகவே கடவுள் திரும்ப திரும்ப வருவார். அப்பா வெவேறு உடலில் வருவார். இப்ப என் உடம்பில் வந்திருக்கிறார். இதற்கு முன் இருந்த இயேசு, நபி, விவேகானந்தா, ராமகிருஸ்னர் எல்லோரும் நான்தான். என் உடல்தான். அப்போது நான் சொன்ன கருத்துக்களைத்தான் இப்போது இந்த உடல் வழியாகவும் இந்த குரல் வழியாகவும் சொல்கிறேன்." என்று எல்லோரையும் நம்ப வைப்பது போல் பேசுவார் நித்தியானந்தா.


முஸ்லிம்களை சீண்டி பார்த்த நக்கீரன் இதழ் அலுவலத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சென்னையில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் பெண்கள் குழுந்தைகள் வயதானோர் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சீண்டி பார்த்த நக்கீரன் அலுவலகம் அருகே மீர்சாகிப்பேட்டையில் நின்று தங்களது சீற்றத்தை காட்டினர்! அல்ஹம்துலில்லாஹ்!
இறுதியில் காவல்துறையினாரால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Courtesy : http://www.tntj.net/?p=12986