நேற்று ஆரைப்பற்றை செல்வா நகரைச் சேர்ந்த ஒருவரின் உடல் கர்பலா பகுதியில் கர்பலா ஜும்மா பள்ளியிலிருந்து சிறிது தூரத்தில் வீதிக்கு மறுபுறம் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த HK ஹாஜியாருக்கு சொந்தமான நிலத்தில் புதைக்கப்பட்டதை அடுத்து பிரதேசத்தில் பதற்றம் நிலவுகிறது.
கர்பலா வீதியில் பாலமுனை நோக்கிச் செல்லும் போது இடது புறம் காணப்படும் நிலப்பகுதிகள் 99 வீதம் முஸ்லிம்களுக்கே சொந்தமாக காணப்படுகின்றன. ஏற்கெனவே இப்பகுதியில் இந்துக் கோவில் ஒன்று அமைக்கப்பட்டது பிரச்சினைகளைத் தோற்றுவித்திருந்தது. அநேக காணிகள் எல்லைப்படுத்தப்படாமல் காணப்படுவதாலும், தற்போது உடல் புதைக்கப்பட்ட காணிக்கு அடுத்துள்ள காணி தமிழர் ஒருவருக்கு ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்டு விட்டதால், புதைக்கப்பட்ட காணிக்கு அவர் உரிமை கோருவதாலும் நிலைமை சிக்கலடைந்து இருப்பதாக கர்பலா தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றிரவு சம்மேளனத்தில் இவ்விடயம் தொடர்பான கூட்டம் ஒன்று இடம்பெற்றது. காணி உரிமையாளர் உரிய உறுதியுடன் வந்து உரிமையை உறுதிப்படுத்தி முறைப்பாடு செய்யுமிடத்து புதைக்கப்பட்ட உடலை அகற்றி தமிழர்களுக்குரிய மயானத்தில் அடக்கம் செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்று பொலிஸ் தரப்பு தெரிவித்ததை அடுத்து, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சம்மேளனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே சிகரம் பகுதியில் முஸ்லிம் மக்பரா தொடர்பான பிரச்சினை ஏற்பட்டிருப்பது எமது குழுவிலும் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பான விரிவான கட்டுரை ஒன்று விரைவில் வெளியிடப்படும். இது தொடர்பான கூட்டங்களின் போது, கர்பலா பகுதியில் எங்களுக்கு மயானம் அமைக்க இடம் வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த் தரப்பால் முன்வைக்கப்பட்டிருந்தது. இப்பிரச்சினையின் எதிரொலியாகவே இந்த உடல் புதைக்கப்பட்ட சம்பவம் அமைந்திருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
- http://www.muslimguardian.com/