Tuesday, February 23, 2010

பொதுத்தேர்தல் குறித்து வடமாகாண மஜ்லிஸுல் சூறா அமைப்பு ஆராய்வு

எதிர்வரும் பொதுத்தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து ஆராயும் கூட்டமொன்று புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.வடமாகாண மஜ்லிஸுல் சூறா அமைப்பின் தலைவர் மௌலவி எஸ்.எச்.எம்.ஏ.முபாறக் (றசாதி) தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக வட மாகாணத்திலிருந்து இருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லிம்களது மீள்குடியேற்றம், இழந்த சொத்துக்களுக்கான நஷ்டஈடு, தொழில் வாய்ப்பு, மதவழிபாட்டுத் தலங்கள் புனரமைப்பு போன்ற அம்சங்களை நிறைவேற்றுவதில் முன்னுரிமையளிக்கும் அணியுடன்,தமது அமைப்பு எதிர்வரும் வாரங்களில் பேச்சுக்களை நடத்தவுள்ளது. மேற்படி கலந்துரையாடலின் போது இம்முடிவு எட்டப்பட்டதாக மஜ்லிஸுல் சூறா அமைப்பின் தேசிய அமைப்பாளர் மௌலவி அஜ்மல்.ஏ.காதர் தெரிவித்தார்.

"முஸ்லிம் விரோத சக்திகளின் கூட்டின் மூலம் சமூகத்துக்கு எந்தவித பலனும் கிட்டியதாக வரலாறுகள் இல்லை. எமது அமைப்பால் முன் வைக்கப்படும் கோரிக்கைகளுக்குக் கிடைக்கும் பதிலின் மூலம்,நாம் சார்ந்து நிற்கும் சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும்" என்றும் தேசிய அமைப்பாளர் மௌலவி அஜ்மல்.ஏ.காதர் மேலும் கூறினார்.
-virakesari.